பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை தோற்கடித்து 8வது முறையாக ஃபிஃபா உலகக் கோப்பை காலிறுதிக்கு முன்னேறியது. ஃபிஃபா உலகக் கோப்பை 2022 தொடரின் 16வது சுற்றில் நேற்று நடைபெற்ற போட்டியில், ஐந்து முறை சாம்பியனான பிரேசில் அணி தோஹாவில் உள்ள ஸ்டேடியம் 974-இல் நடந்த 16-வது சுற்று ஆட்டத்தில் தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, 8வது முறையாக ஃபிஃபா உலகக் கோப்பை காலிறுதிக்கு முன்னேறியது. பிரேசிலுக்காக வினிசியஸ் ஜூனியர், […]
தென்கொரியாவின் KSTAR எனும் ஆய்வு நிறுவனம் 20 நொடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை அடையும் வகையிலான செயற்கை சூரியனை உருவாகியுள்ளது. தென் கொரியாவின் magnetic fusion device, கொரியா சூப்பர் கண்டக்டிங் டோகாமாக் மேம்பட்ட ஆராய்ச்சி (Korea Superconducting Tokamak Advanced Research) அல்லது KSTAR ஒரு புதிய உலக சாதனையை படைத்துள்ளது. இது வெப்பநிலையை 100 மில்லியன் டிகிரி செல்சியஸுக்கு மேல் 20 விநாடிகளுக்கு உருவாகியுள்ளது. இந்த சாதனம் சூரியனின் மையத்துடன் ஒப்பிடும்போது […]
மேசக் புயல் கடக்கும்போது கல்ப் லைவ் ஸ்டாக் என்ற கப்பல் கடலில் மூழ்கியது. அதில் இரண்டு பேர் மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த புதன் கிழமை நள்ளிரவு 1 மணியளவில் மேசக் என்ற புயல் வீசியது. இதில் வரலாறு காணாத விதமாக, மணிக்கு கிட்டத்தட்ட 210 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. இந்த புயலால் ஜப்பான் மற்றும் கொரிய தீபகற்பத்தில் வீடுகள் மற்றும் பிற கட்டிடங்களை சேதமடைந்தது. இந்தநிலையில், இந்த மேசக் புயல் […]
தென் கொரியாவுடன் தொடர்புகொள்ள உதவும் கேசோங் தொடர்பு அலுவலகத்தை, வட கொரியா வெடிவைத்துத் தகர்த்துள்ளது. வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே பதற்றம் உருவாகியுள்ள நிலையில், வடகொரியாவில் இருந்து தப்பிய சிலர் தங்களுக்கு எதிராக தென் கொரியாவில் இருந்து துண்டுப் பிரசுரங்கள் அனுப்பி வருவதாக வடகொரியா குற்றம் சாட்டியது. வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் அவரது ஆட்சியை விமர்சிக்கும் வகையில் சிலர் தென் கொரியாவில் இருந்து ஹீலியம் பலூன்களை அனுப்புவதாக வடகொரியா […]
தென்கொரியா-வடகொரியா இரு நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. தென்கொரியா-வடகொரியா இரு நாடுகளுக்கும் இடையே இருந்த பனிப்போர் கடந்த 2018-ஆண்டு தான் முடிவுக்கு வந்தது.அதனை வெளிப்படுத்தும் விதமாக இரு நாட்டு அதிபர்களும் எல்லையை கடந்த நட்பை வெளிப்படுத்தினார்கள்.தொடர்ந்து இரு நாடுகளும் நட்பு பாராட்டி வந்த நிலையில் தற்போது அதில் உரசல் ஏற்பட்டுள்ளது. தென் கொரியா-வடகொரியா இடையே கடந்த ஒரு மாதமாக மோதல் போக்கு உருவாக்கி வருகிறது.வடகொரியாவிற்கு எதிராக துண்டு பிரசுரங்கள் விநியோகித்ததால் இந்த மோதல் உருவாகியுள்ளது.இரு தரப்பு […]
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை காரணமாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தென்கொரியா மறுத்துள்ளது. வடகொரிய அதிபராக இருந்து வருபவர் கிம்ஜாங்.ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ஆம் தேதி கிம் ஜாக்கின் தாத்தாவின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.இந்த விழாவில் நாட்டின் உயரதிகாரிகள் அனைவரும் கலந்து கொள்வது வழக்கம்.ஆனால் கடந்த 15-ஆம் தேதி நடைபெற்ற விழாவில் கிம் கலந்து கொள்ளவில்லை. இது பெரும் விவாதத்தை கிளப்பியது. இதற்குஇடையில் தான் இவர் […]
தென்கொரியா, ஜப்பான் நாட்டு பயணிகள் இந்தியா வர தற்காலிகமாக மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. மேலும் ஜப்பான், தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பரவுவதால் விசா தருவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சீனாவில் ஆண்டு கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொவிட் 19 வைரஸ் பரவி தொடர்ந்து தினமும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவி கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொவிட் 19 வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் […]