சென்னையில் மறு உத்தரவு வரும் வரை பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் வழங்குவதற்கு தடை விதித்து தெற்கு ரயில்வே உத்தரவு. ராணுவத்தில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் மத்திய அரசு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். ‘அக்னிபத்’ ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கான வயது வரம்பு 17.5 லிருந்து 23-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்பின் […]
தற்போதைய காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள செல்பி மோகத்தால் ரயில் படிக்கட்டுகள்,ரயிலின் மேல் நின்று செல்பி எடுப்பது, ரயில் தண்டவாளத்தில் செல்பி எடுப்பது போன்ற விபரீதங்களால் இளைஞர்கள் பலி என்ற செய்தியை அவ்வப்போது நம் படித்து வருகிறோம். இந்நிலையில்,உயிருக்கு ஆபத்தான இச்செயல்களை கட்டுப்படுத்த ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்தால் ரூ.2000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.மேலும், கடந்த 2021-22 ஆம் ஆண்டில் சென்னை புறநகர் மின்சார ரயில்களில் இருந்து இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் […]
கொரோனா அச்சுறுத்தலால் நாளை முதல் மின்சார ரயிலில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நாளை முதல் மே 20 வரை புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50% பணியாளர்கள், பிற்பகல் 12 மணிவரை மட்டுமே மளிகை, தேனீர் கடைகள் செயல்படும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக சென்னை புறநகர் ரயில்களில் நாளை முதல் 20ம் […]
ஏப்ரல் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக ரயில் முன்பதிவு மையங்களை இயங்காது என தெற்கு ரயில்வே அறிவிப்பு. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அமலில் இருக்கும் இரவு 10 மணி முல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், ஞாயிறு தோறும் முழு பொதுமுடக்கம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், ஏப்ரல் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக ரயில் முன்பதிவு மையங்களை இயங்காது […]
ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் விலை ரூ.10லிருந்து ரூ.50ஆக உயர்த்துவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் ரூ.10லிருந்து ரூ.50ஆக உயர்ந்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முக்கிய ரயில் நிலையங்களான சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் உயர்ந்தை தொடர்ந்து மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளன. கொரோனா பரவலால் ரயில் நிலையங்களில் பயணிகளுடன் வருபவர்களுக்கு அனுமதி வழங்காத நிலையில், நேற்று முதல் பயணிகளுடன் வருபவர்களையும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் […]
வரும் 15-ம் தேதி முதல் புறநகர் மின்சார ரயில்களில் மாணவர்கள் பயணிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. வரும் 15-ம் தேதி முதல் புறநகர் மின்சார ரயில்களில், அனைத்து நேரங்களிலும் மாணவர்கள் பயணிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ரயில்களில் பயணிக்க மாணவர்களின் அடையாள அட்டை அவசியம் என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையே, கொரோனா காரணமாக சென்னை புறநகர்களில் ஓடும் மின்சார ரயில்கள் கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதி முதல் நிறுத்தப்பட்டன. பின்னர் ஊரடங்கில் […]
வார நாட்களில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை கூடுதல் மின்சார ரயில் சேவை என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் வார நாட்களில் கூடுதலாக மின்சார ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது. தற்போது சென்னையில் தினமும் 500 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 160 மின்சார ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் 4-ஆம் தேதி முதல் கூடுதலாக 160 சர்வீஸ் இயக்குவதற்கு தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி, வார […]
சென்னையில் நாளை முதல் கூடுதலாக 90 புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதனால் புறநகர் ரயில்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர், அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக அக்டோபர் 5 ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பின்னர், அனைத்து மக்களும் பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி பொதுமக்கள், காலை […]
ஜனவரி 4 ஆம் தேதி முதல் சென்னை மதுரை சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 4 ஆம் தேதி மதுரையிலிருந்து சென்னை இயங்கும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலின் வண்டி எண் 02613 / 02614 ரத்து செய்யப்படுகிறது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பயணிகளிடம் ஆதரவு குறைந்து காணப்படுவதால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நிவர் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக சென்னையில் நாளை காலை 10 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதவாது, நிவர் புயல் காரணமாக சென்னையில் இருந்து திருச்சி, கன்னியாகுமரி, மதுரை, தஞ்சை, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு செல்லும் 27 ரயில்கள் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் எனவும் அறிவிகப்பட்டுள்ளது.
நிவர் புயல் காரணமாக சென்னையில் இன்று புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது, இதனை நேற்று தெற்கு ரயில்வே அறிவித்தது. இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், நிவர் புயல் காரணமாக இன்று காலை 10 மணி முதல் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. நிலைமையை பொறுத்து நாளை விடுமுறை குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயலானது, தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயலானது, புதுச்சேரியில் […]
சென்னை மின்சார ரயிலில், வரும் 23 ஆம் தேதி முதல் அனைத்து பெண் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படுள்ளது. சென்னை மின்சார ரயிலில், வரும் 23 ஆம் தேதி முதல் அனைத்து பெண் பயணிகளுக்கும் அத்தியாவசிய பணிகள் தவிர்த்து காலை 7 -10 மணி வரையலும் மாலை 4:30 -7:30 மணி வரையும் இயக்கப்படும். ஆனால், அத்தியாவசிய பணியாளர்களுக்கு இந்த நேர கட்டுப்பாடு கிடையாது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து பயணிகளும், நேரக் […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர், தமிழகத்தில் அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக சிறப்பு ரயில்கள் இயங்கி வருகிறது. இதைத்தொடர்ந்து, சென்னையில் புறநகர் ரயில்களை இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், அக்டோபர் 5-ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையைகாட்டி பயணிக்கலாம் எனவும் சமூக இடைவெளி, முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க […]
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க தெற்கு ரயில்வேயின் சிறப்பு ஏற்பாடுகள். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தீவிரமான முயற்சிகள் நடைபெற்று வருகிற நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வரும் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும், கட்டாயமாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஊரங்கிற்கு பின் ரயில்கள் இயக்கப்பட்டால், மக்கள் […]
இன்று சென்னை எழும்பூர் -சேலம் இடையே ஆன விரைவு ரயில் இரண்டு நாள்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இணை பெட்டி இல்லாததால் சென்னை எழும்பூரில் இருந்து இன்று இரவு 10.45 சேலம் புறப்படும் ரயில் எண் 22153 ரயிலும் , நாளை இரவு 09.20 மணிக்கு சேலத்தில் இருந்து – சென்னைக்கு வரும் ரயில் எண் 22154 ரயிலும் ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.