தூத்துக்குடி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று தூத்துக்குடியில் புதியதாக கட்டப்பட்டுள்ள தென்னிந்தியாவின் முதல் மினி டைடல் பார்க்கை திறந்து வைத்தார். ரூ.32.5 கோடி மதிப்பீட்டில் 4 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள இந்த மினி ஐடி பார்க்கில் பல்வேறு ஐடி நிறுவனங்கள் மற்றும் உணவு கூடங்கள், பார்க்கிங் என பல்வேறு வசதிகள் கொண்டுள்ளன. இந்த திறப்பு விழாவில், தூத்துக்குடி எம்பி கனிமொழி, அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா. பெ.கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர். முதலமைச்சர் ஐடி பார்க் […]
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட அதிகனமழையால் பாதிக்கப்பட்ட 2,60,909 விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி வழங்கிட முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நிவாரணத் தொகையை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தென்மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் வரலாறு காணாத அதிகனமழைப் பொழிவு ஏற்பட்டது. தென்மாவட்டங்களின் பல பகுதிகளில் சராசரி ஆண்டு மழையளவை […]
இன்று தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான இன்று போகி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனால் பல்வேறு இடங்களில் பனி மூட்டம் அதிகமாக இருக்கிறது. இதோடு சேர்த்து தற்போது பனிமூட்டமும் அதிகமாக காணப்படுகிறது. லட்சத்தீவுக்கு விமான சேவை.! சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவிப்பு.! தனியார் வானிலை ஆய்வு மைய தலைவர் பிரதீப் ஜான் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிடுகையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வட தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் […]
தென் மண்டல ஐஜி-யான சண்முக ராஜேஸ்வரன் இன்றுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில், அவருக்கு பதில் தென் மண்டல புதிய ஐஜி-யாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி முருகன் நியமிக்கப்பட்டார். மேலும், சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் சர்ச்சையானதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அருண் பாலகோபாலன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டடார். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. ராமநாதபுரம் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகரம், முத்தையாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது.நெல்லை மாவட்டம் தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.
ஓகி புயலின் தாக்கத்திலிருந்து மீண்டு வந்திருக்கும்தேன் தமிழகத்தில் தற்போது மீண்டும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உண்டாகி இருப்பதால், அடுத்து இரண்டு நாட்களுக்கு தென்தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோயிலில் 3.செ.மீ மழை பெய்துள்ளது.