ரயில் பெட்டிகள் கொரோனாவுக்கு தனிமைப்படுத்தப்படும் அறைகளாக மாற்றம்.!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் தற்போது வரை 979 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில்  பாதிக்கப்பட்டோருடன் நேரடித் தொடர்பில் இருந்ததாக அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வைரஸ் பரவல் கணித்த விகிதத்தை விட வேகமாக இருப்பதால் மருத்துவ வசதிகள் கிடைப்பதில் சிரமாக இருக்க வாய்ப்புள்ளது. ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில், இந்தியாவில் … Read more

பயணிகளுக்கு சிறப்பு ரயில்கள்.! தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு.!

தமிழகத்தில் கோடை விடுமுறையையொட்டி தாம்பரம் – நாகர்கோவில் மற்றும் நாகர்கோவில் – சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில்களை இயக்குவதாகத் தெற்கு ரயில்வே அதிரடியாக அறிவித்துள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 8ம் தேதி முதல் ஜூலை 1ம் தேதி வரை புதன்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 4.45 மணிக்குப் புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 5.25 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.  இதையடுத்து ஏப்ரல் 9ம் தேதி முதல் ஜூலை 2ம் தேதி வரை வியாழக்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து இரவு … Read more

முந்துங்கள் இன்றுடன் முடிவடைகிறது.! தெற்கு ரயில்வே துறையில் 3655 காலியிடங்களுக்கான வேலை வாய்ப்பு.!

தெற்கு ரயில்வே துறையில் அப்பரண்டீஸ் பயிற்சி பெற 3655 காலியிடங்கள் உள்ளது. அப்பரண்டீஸ் பயிற்சி பெற 10-வது முடித்த 50% சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ரயில்வே துறையில் பணிபுரிய வேண்டும் என்பது பலருக்கும் கனவாக இருக்கும். பின்னர் அதற்கு முறையான அப்பரண்டீஸ் பயிற்சி பெற்றால் வாய்ப்புகள் கிடைக்கும். தற்போது தெற்கு ரயில்வே துறையில் அப்பரண்டீஸ் பயிற்சி பெற 10-வது முடித்த 50% சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் 3655 … Read more

கனமழை எதிரொலி – ஊட்டி மலை ரயில் 3 நாட்களுக்கு ரத்து !

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக ஊட்டி மலை ரயில் அடுத்த 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோரம் இருக்கும் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு பலத்த மலையானது பெய்துள்ளது. பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் … Read more

ஃபானி புயல் காரணமாக இன்று முதல் 7-ம் தேதி வரை சில ரயில்கள் ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்தது

ஒடிசாவில் இன்று ஃபானி புயல் கடற்கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் ஒடிசா மாநிலத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள 10 லட்சத்திற்கு மேல் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி கடற்கரையில் ஃபானி புயல் மணிக்கு சுமார் 17-200 கி. மீட்டர் வேகத்தில் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் ஃபானி புயல் காரணமாக நூற்றுக்கணக்கான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று 5 விரைவு ரயில்கள் ரத்து  சந்திரகாச்சி … Read more