தெற்காசியாவில் குறிப்பாக பங்களாதேஷ், இந்தியா மற்றும் நேபாளத்தை பாதித்த கடுமையான வெள்ளத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் 1.65 மில்லியன் டாலர் உதவி நிதியை வழங்க உள்ளது. இந்தியா மற்றும் பங்களாதேஷை மிகவும் சேதப்படுத்திய ஆம்பான் சூறாவளி உள்ளிட்ட தொடர்ச்சியான பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஆதரிப்பதற்காக இந்த நிதி உதவியை வழங்க உள்ளது என டாக்காவில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதரகம் இன்று தெரிவித்துள்ளது. தெற்காசியாவில் வெள்ளத்தால் சுமார் 17.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகள், கால்நடைகள், விவசாய நிலங்கள் […]
கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை பலரது வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளது. இதனால் பொதுமக்களிடையே பயம், பதட்டம், மனச்சோர்வு, மன அழுத்தம் ஆகியவை அதிகரித்துள்ளது. – உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் இயக்குனர் பூனம் கேத்ரபால் சிங். கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் மாதம் முதல் உலகில் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்பின்னர் தற்போது உலக நாடுகளில் ஊரடங்கு சிறிதுசிறிதாக தளர்த்தப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. இதனால், […]
கொரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. பல நாடுகள் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றது. உலகம் முழுவதும் 9,714,809 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 491,856 பேர் உள்ளது. இந்த வைரஸைக் கட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் , யுனிசெஃப், கொரோனா வைரஸ் பாதிப்பால் தெற்காசியாவில் 120 மில்லியன் குழந்தைகள் வறுமைக்குத் தள்ளப்படுவார்கள் அபாயம் உள்ளது என கூறியுள்ளது. பொருளாதாரத்தை […]