பழம்பெரும் வங்காள நடிகரான சௌமித்ர சாட்டர்ஜி அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது, அவர் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் சாட்டர்ஜியின் சிறுநீரகங்கள் செயலிழந்து உள்ளதாகவும், ஹீமோகுளோபின் மற்றும் ப்ளேட்லெட்களின் அளவு ரத்தத்தில் குறைந்துள்ளதாகவும், யூரியா மற்றும் க்ரியாடனின் அளவுகள் அதிகமாக காணப்படுவதாகவும், அவரது உடல் சிகிச்சைகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், அவரது உடல்நிலை மிகவும் மோகமாகி கவலைக்கிடமாக உள்ளதாக மூத்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.