சோத்துப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு – முதல்வர் பழனிசாமி
சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து குடிநீர் தேவைக்காகவும், பாசனத்துக்காகவும் நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், சோத்துப்பாறை நீர்த்தேக்கத்தில் இருந்து முதல் போக சாகுபடி 1,825 ஏக்கர் பழைய நன்செய் நிலங்களுக்கும், 1,040 ஏக்கர் புதிய புன்செய் நிலங்களுக்கும் மற்றும் பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்கும் சேர்த்து 26.10.2020 முதல் 15.3.2021 வரை, முதல் 51 நாட்களுக்கு விநாடிக்கு 30 கன அடி வீதமும், […]