தூத்துக்குடி -கந்த சஷ்டி விழாவானது கடந்த நவம்பர் இரண்டாம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கிய நிலையில் ஆறாம் நாளாளின் முக்கிய நிகழ்வான இன்று மாலை சூரசம்காரம் அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பாக நடைபெற்றது. குறிப்பாக, முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் இன்று மாலை கடற்கரையில் பக்தர்கள் வெள்ளத்தில் நடைபெற்றது. இந்த சூரசம்கார நிகழ்வை ஒட்டி திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் அதிகாலை 1 மணிக்கே நடை திறக்கப்பட்டு […]
கடந்த நவம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற கந்த சஷ்டி நிகழ்வின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று முருகனின் அறுபடை வீடுகளில் (திருத்தணி தவிர) நடைபெற்றது. குறிப்பாக சூரனை வதம் செய்த அறுபடை வீடுகளில் 2வது வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்றது. சூரசமஹாரா நிகழ்வை முன்னிட்டு இன்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்னர் ஜெயந்தி நாதராக யாகசாலை மண்டபம், கந்தசஷ்டி மண்டபம், சண்முக விலாச மண்டபத்தில் […]
தூத்துக்குடி: திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா வரும் 13ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து, கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 18ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த விழாவிற்கு அமைச்சர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள், பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இவ்விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 18ம் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை கந்த சஷ்டியை முன்னிட்டு ஐப்பசி மாத அமாவாசைகளில் பிறகு வரும் ஆறாம் […]
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோலாகலமாக இன்று மாலை கடற்கரையில் நடக்கும் சூரசம்ஹாரம் நிகழ்வில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இன்று கந்த சஷ்டி விழாவையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோலாகலமாக சூரசம்ஹார நிகழ்வு மாலை நடைபெற உள்ளது. வருடம்தோறும் கடற்கரையில் நடைபெறும் இந்த சூரசம்ஹார நிகழ்வுக்கு இந்த வருடம் அனுமதி மறுக்கப்பட்டு இருந்தாலும், பக்தர்கள் மற்றும் கோவில் பூசாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க நீதிமன்றத்தில் இதற்கான அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால், வழக்கம்போல கடற்கரையில் கோலாகலமாக நடைபெற உள்ள இந்த […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருசெந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கடந்த 28 -ஆம் தேதி கந்த சஷ்டி தொடங்கியது.ஆனால் இதன் முக்கியமான திருவிழாவாக கந்த சஷ்டி கருதப்படுகிறது.இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (நவம்பர் 2-ஆம் தேதி) நடைபெறுகிறது.இதனையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.சூரசம்ஹாரம் நிகழ்வை பார்ப்பதற்காக திருச்செந்தூரை நோக்கி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் படையெடுத்துள்ளனர்.தற்போது திருசெந்தூரில் சூரசம்ஹார நிகழ்வு நடைபெற உள்ளது.