சூரரை போற்று படக்குழுவின் மாஸ் அப்டேட். இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் சூரரை போற்று. இப்படம் இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிராகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்துக்காக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துடன் இணைந்திருப்பதாக முதல் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. […]