புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இஸ்ரோ தலைவர் சோம்நாத்

Somnath: ஆதித்யா எல்1 விண்கலம் செலுத்தப்பட்ட தினத்தில் தனக்கு புற்று நோய் பாதிப்பு கண்டறியப்பட்டாதாகவும் அதன்பிறகு சிகிச்சை எடுத்துக் கொண்டு அதிலிருந்து மீண்டதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். அதன்படி, கடந்தாண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி புற்று நோய் பாதிப்பு இருந்தது தெரியவந்ததாக சோம்நாத் தெரிவித்தார். தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த போது இவ்வாறு அவர் கூறினார். மேலும் சோம்நாத் பேசும் போது, “கடந்தாண்டு எனக்கு புற்று நோய் பாதிப்பு இருந்தது. அதாவது, ஆதித்யா எல்1 … Read more

ஆய்வு பணியை தொடங்கியது எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் – இஸ்ரோ தலைவர் பேட்டி

somanath

புத்தாண்டு தினமான இன்று இஸ்ரோவின் எக்ஸ்போசாட் என்ற செயற்கைகோள் உள்ளிட்ட 11 செயற்கைகோள்கள் பி.எஸ்.எல்.வி – சி 58 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்கள் போன்ற வானியல் நிகழ்வுகளை விரிவாக ஆராய எக்ஸ்போசாட் (XPoSat) என்ற செயற்கைக்கோள் வடிவமைத்துள்ளனர். சூரியன், சந்திரன், செவ்வாய் தாண்டிய பிரபஞ்சம் பற்றிய ஆராய்ச்சிக்காக செயற்கைகோள் அனுப்பப்பட்டது. 11 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி – … Read more

ககன்யா திட்டத்தின் மாதிரி விண்கலம் சோதனை ஒத்திவைப்பு..!

isro

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்   விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில், மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனை இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  கன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் TV-D1 ராக்கெட் மூலம் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. தரையில் இருந்து 16.6  கி.மீ. தூரம் வரை அனுப்பி, மீண்டும் அதை பூமிக்கு கொண்டுவந்து வங்கக்கடலில் இறக்கப்படும். இந்த சோதனை வெறும் 20 நிமிடத்தில் … Read more

இஸ்ரோ திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக முதல்வர் உறுதி.. இஸ்ரோ தலைவர் பேட்டி!

Somnath

சென்னை பாடியில் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவை இஸ்ரோ தலைவர் சோம்நாத் இன்று அவரது இல்லத்துக்கு நேரில் சென்று பேசினார். இந்த சந்திப்பின்போது, பிரக்ஞானந்தாவுக்கு GSLV ராக்கெட்டின் மாதிரியை பரிசாக வழங்கினார் இஸ்ரோ தலைவர் சோம்நாத். மேலும், எதிர்வரும் போட்டிகளில் அனைத்திலும் சிறப்பாக விளையாட பிரக்ஞானந்தாவுக்கு இஸ்ரோ தலைவர் வாழ்த்து தெரிவித்தார். இதன் பின், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  நேரில் சந்தித்து பேசினார் இஸ்ரோ தலைவர் சோம்நாத். இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ … Read more

PSLV C-54 ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்! அடுத்தாண்டு ஆதித்யா – இஸ்ரோ அறிவிப்பு

பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட 9 செயற்கைகோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தும். ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 11.58 மணிக்கு பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஓசன்சாட் 03 என்ற புவிநோக்கு செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் சுமந்து சென்றது. இதில் அமெரிக்காவின் 4, பூடானின் 2 ஆகிய செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. புவிநோக்கு செயற்கைக்கோள் EOS-6 உள்ளிட்டவை வெவ்வேறு சுற்றுப்பாதையில் … Read more

இஸ்ரோவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த சோம்நாத்!

இஸ்ரோவின் புதிய தலைவராக கேரளாவை சேர்ந்த சோம்நாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய விண்வெளி அமைப்பான இஸ்ரோவின் தலைவராக இதுவரை செயல்பட்டு வந்த கே.சிவன் அவர்களின் பதவி காலம் தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை அடுத்து கேரளாவை சேர்ந்த எஸ்.சோம்நாத் அவர்கள் இஸ்ரோவின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் சென்டரில் இயக்குனராக இருந்து வருவதாகவும், கொல்லத்தில் உள்ள டிகேஎம் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர் எனவும் கூறப்படுகிறது. அடுத்த மூன்று ஆண்டு காலத்துக்கு … Read more

பார்வதி கோயில் உள்ளிட்ட திட்டங்கள் – அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி…!

குஜராத் சோம்நாத்தில் பார்வதி கோயிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி திட்டங்களை தொடங்கி வைத்தார். குஜராத்தின் சோம்நாத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் சில திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று காலை அடிக்கல் நாட்டினார். அதன்படி,குஜராத்தில் பிரதமர் மோடியால் துவக்கப்பட்ட திட்டங்களில் சோமநாத் கண்காட்சி மையம், சோம்நாத் நடைபாதை, பழைய (ஜுனா) சோமநாத்தின் புனரமைக்கப்பட்ட கோவில் வளாகம் மற்றும் பார்வதி கோவில் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுற்றுலா அமைச்சர் … Read more