டெல்லி : சந்திரியான்-3 வெற்றியைக் கொண்டாடும் வகையில் இன்று தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படுகிறது. அதனால், பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் இன்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இதே நாள் இந்திய விண்வெளி துறை மிகப்பெரிய சாதனையைப் படைத்தது. அதாவது, அமெரிக்க ரசியா, சீனா நாடுகளுக்கு அடுத்தபடியாக நிலாவில் தரையிறங்கிய 4-வது நாடாக இந்தியா இருந்து வருகிறது. இதில் பெருமைப்படும் விஷயம் என்னவென்றால் நிலவில் இதுவரை எந்த நாடும் நெருங்காத தென் துருவப் பகுதியில் தரையிறங்கிய முதல் நாடக இந்தியா உள்ளது. இதன் […]
டெல்லி : நாளை (ஆகஸ்ட் 23) முதல் தேசிய விண்வெளி தினத்தை இந்தியா கொண்டாட இருக்கிறது என இஸ்ரோ தலைவரான டாக்டர் எஸ்.சோம்நாத் பேட்டியில் கூறியிருக்கிறார். தேசிய விண்வெளி தினம் : எப்போது ? ஏன் ? கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி மையம் (இஸ்ரோ) உருவாக்கிய சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்திற்கு அருகே வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதனால், உலக நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு […]
ஸ்ரீஹரிகோட்டா : பேரிடர் காலங்களில் உதவும்படியாக புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை (EOS-08) எஸ்எஸ்எல்வி டி3 ராக்கெட் உதவியுடன் இன்று காலை விண்ணில் ஏவப்பட்டது. அடுத்த ககன்யான் திட்டம் தான் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இன்று காலை 9.17 மணியளவில் ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து எஸ்எஸ்எல்வி-டி3 ரக ராக்கெட் மூலம் EOS-08 (Earth Observation Satellite-8) எனும் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான கவுன்டவுன் இன்று அதிகாலை 3 மணிக்குத் தொடங்கியது. தற்போது செயற்கைக்கோளானது வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சுமார், 196 கிலோ எடை கொண்ட EOS-08 செயற்கைக்கோளானது, புவி வானிலை, பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. பூமியின் […]
தற்போதைய இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (இஸ்ரோ) தலைவர் எஸ்.சோம்நாத் சுயசரித புத்தகம் ஒன்று எழுதியுள்ளார். இதில் முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார். அதில், 60 வயது நிறைவடைந்தவுடன் தானுக்கும், சிவனும் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதற்கிடையில் கடந்த 2018 இல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (இஸ்ரோ) தலைவராக AS கிரண் குமார் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தன்னுடைய பெயரும், சிவன் பெயரும் பரிந்துரைக்கப்பட்டது. இப்பதவியை நான் அடைவேன் […]
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் இன்று விண்ணில் பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனை இன்று வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த சோதனை காலை 8 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின் மோசமான வானிலை காரணமாக 8.30-க்கு நடைபெறும் என தெரிவித்த நிலையில், மோசமான வானிலை காரணமாக இந்த […]
ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் ஏவுதல் வெற்றி பெற்றதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி. ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் விண்ணில் சற்று முன் ஏவப்பட்டது. ஓசன்சாட் 03 என்ற புவிநோக்கு செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் சுமந்து சென்றது. இதில் அமெரிக்காவின் 4, பூடானின் 2 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட். புவிநோக்கு செயற்கைக்கோள் EOS-6 உள்ளிட்டவை வெவ்வேறு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டது. கடலில் […]