இந்திய கடற்படை 24 மணி நேரத்தில் வெற்றிகரமாக இரண்டாவது கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கையை தடுத்துள்ளது. சோமாலியாவை சேர்ந்த 11 கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்த மீன்பிடி கப்பலான அல் நயீமி மற்றும் 19 பாகிஸ்தானியர்களை இந்திய கடற்படை மீட்டுள்ளது. நேற்று ஈரானை சார்ந்த 17 பேர் ஏடன் வளைகுடா பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென சோமாலியா கடற்கொள்ளையர்கள் அந்தக் கப்பலை சிறைபிடித்தனர். அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் சுமித்ரா கப்பல் […]
சோமாலியாவின் கிழக்கு கடற்கரை மற்றும் ஏடன் வளைகுடா பகுதியில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இமான் என்ற மீன்பிடி கப்பலை இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சுமித்ரா வெற்றிகரமாக மீட்டுள்ளது. ஈரான் நாட்டுக் கொடியுடன் மீன்பிடிக் கப்பல் ஒன்று கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டதாகத் தகவல்கள் கிடைத்தது. உடனே அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சுமித்ரா சம்பவ இடத்திற்கு சென்றது. அங்கு இருந்த கொள்ளையர்களை இந்தியப் பாதுகாப்புப் படையினர் சோமாலியாவை நோக்கிச் செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். ஐஎன்எஸ் […]
சோமாலியா அருகே இந்திய மாலுமிகள் 15 பேருடன் கடத்தப்பட்ட ‘எம்.வி லீலா நார்போக்’ சரக்கு கப்பலை, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலின் கமாண்டோக்கள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு மீட்டனர். மத்திய ஆப்ரிக்காவைச் சேர்ந்த சோமாலியா அருகே 15 இந்தியர்களுடன் சென்று கொண்டிருந்த சரக்கு (MV LILA NORFOLK ) கப்பல் நேற்று முன்தினம் மாலை கடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லைபீரியா நாட்டு கொடியுடன் கப்பல் சென்றதால், இந்திய மாலுமிகள் கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. அரபிக்கடல் […]
சோமாலியா அருகே இந்தியர்களுடன் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் கடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மத்திய ஆப்ரிக்காவைச் சேர்ந்த சோமாலியாவின் கடற் பகுதியில் MV LILA NORFOLK என்ற சரக்கு கப்பல் நேற்று மாலை கடத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலில் இந்தியர்கள் 15 பேர் உள்ளனர். லைபீரியா நாட்டு கொடியுடன் கப்பல் சென்றதால், இந்திய மாலுமிகள் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சோமாலியா கடற்கொள்ளையர்கள் கப்பலை கடத்திய நிலையில், இந்தியர்களின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லை எனவும் […]
சோமாலிய பிரதமர் முகமது ஹுசைன் ரோபிளை பணியிடை நீக்கம் செய்து அதிபர் முகமது ஃபர்மாஜோ அதிரடி நடவடிக்கை. சோமாலிய பிரதமர் முகமது ஹுசைன் ரோபில் மீதான ஊழல் மற்றும் நில அபகரிப்பு குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அதிபர் முகமது ஃபர்மாஜோ அவரைப் பணியிடை நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோபிளின் பதவி நீக்கம், நாட்டின் கடற்படையினரிடமிருந்து அவரது தனிப்பட்ட லாபத்திற்காக நிலத்தை அபகரித்த குற்றச்சாட்டுடன் தொடர்புடையது என்றும் கூடுதலாக, சோமாலிய கடற்படைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் […]
40 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் சோமாலியாவின் கெடோ பிராந்தியத்தில் உள்ள ஒரு இராணுவ தளத்தில் விபத்துக்குள்ளானது. கென்யாவின் தலைநகர் நைரோபியில் உள்ள வில்சன் விமான நிலையத்திலிருந்து ஸ்கைவர்ட் விமானம் புறப்பட்டு இன்று காலை வடகிழக்கு கென்யாவில் உள்ள மண்டேராவுக்குச் சென்றது. இந்நிலையில், சோமாலியா-கென்யா எல்லையிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோமாலியாவின் கெடோ பிராந்தியத்தில் உள்ள எல்வாக்கில் உள்ள புராஹேச் இராணுவ முகாமில் ஸ்கைவர்ட் விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து பயணிகள் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் […]
சோமாலியா நாட்டில் உள்ள தலைநகர் மொகடிசுவில் கார் குண்டு வெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும் , 90 பேர் படுகாயம் அடைந்தததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. சோமாலிய நாட்டில் உள்ள தலைநகர் மொகடிசுவில் இன்று காலை நடத்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் 90 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் பெரும்பாலானோர் மாணவர்கள். படுகாயம் அடைந்தவர்களில் பலரின் […]