லடாக் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களின் புகைப்படம் என சமூகவலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று பரவிவருகிறது. அந்த புகைப்படம், நைஜீரிய வீரர்களின் புகைப்படம் என தெரியவந்துள்ளது. லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் கடந்த திங்கட்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் முதலாவதாக ஒரு ராணுவ அதிகாரியும், இரண்டு படை வீரர்களும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. அவர்களை தொடர்ந்து, மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக […]