ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று மாணவர்கள் வீடு தேடி சென்று கஞ்சா விற்பனை செய்தவர் மதுரையில் கைது. மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் வாட்ஸ் அப் மூலமாகவும் நேரடியாக வீடுகளுக்கே சென்றும் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் இரு சக்கர வாகனம் நிற்காமல் வேகமாக சென்று உள்ளது. இதனை தொடர்ந்து சந்தேகத்தின்பேரில் போலீசார் […]