குஜராத் மாநிலத்தில் கடந்த ஜூன் -21ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பாரத்சிங் சோலங்கி தற்போது, 101 நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்றிலிருந்து மீண்டு மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வதோதராவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர், ஜூன் 30-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள கேர் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையில், […]