சிறந்த மருத்துவரும், சமூக ஆர்வலருமான மகேந்திரலால் சர்க்கார் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1883 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி மேற்கு வங்கத்தில் பிறந்தவர் தான் மகேந்திரலால் சர்க்கார். இவர் சிறந்த ஹோமியோபதி மருத்துவரான வில்லியம் எழுதிய புத்தகத்திற்கு விமர்சனம் எழுதினார். ஹோமியோபதிக்கு எதிரான தன் கருத்துக்களை பதிவு செய்வதற்காக அந்த நூலைப் படித்துள்ளார். ஆனால் படித்து முடித்த பின்பு ஹோமியோபதி தான் சிறந்தது என அறிந்த அவர் இறுதியில் ஹோமியோபதியில் பயிற்சி பெற்றுள்ளார். […]
கொரோனா தடுப்பூசிகள் வைத்திருப்பதில் உலக நாடுகளிடையே பாகுபாடு நிலவுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து வல்லரசு நாடுகளான அமெரிக்கா,பிரான்ஸ்,ஜெர்மனி,இஸ்ரேல்,பிரிட்டன் மற்றும் கனடா போன்ற நாடுகள் கொரோனா தடுப்பு மருந்துகளை அதிக அளவில் வாங்கி வைத்துக் கொள்கின்றன.இதனால் ஆசியா,ஆப்பிரிக்கா கண்டங்களில் உள்ள ஏழை மற்றும் வளரும் நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்துகள் சென்றடையாமல் இருக்கின்றன. இந்த நிலையில்,கொரோனா தடுப்பூசிகள் விநியோகம் செய்வதில் பாகுபாடு நிலவுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார். […]
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிராஃபிக் ராமசாமி,சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனே அங்கு வந்து போக்குவரத்தைச் சரி செய்வதை வழக்கமான பணியாகக் கொண்டிருந்தார்.இதனால்தான் ராமசாமிக்கு, டிராஃபிக் ராமசாமி என்ற பெயர் வந்தது.பொதுமக்கள் நலன் கருதி,பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து,அவ்வழக்குகளில் வழக்கறிஞர் துணையின்றி தானே வாதாடி பல நல்ல செயல்கள் செய்து வந்தார்.எனவே,இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவே எடுக்கப்பட்டுள்ளது.ராமசாமி அந்த அளவிற்கு சமூக […]
திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து ஏராளமான தண்ணீர் வீணாவதை கண்டித்து பொதுமக்கள் மாநகராட்சியிடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் மாநகராட்சியை கண்டிக்கும் வகையில், அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் என்பவர், குழாய் உடைந்து சாலையில் வீணாகும் தண்ணீரில் குளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். நாட்டில் தண்ணீர் பிரச்னை அதிகரித்து கொண்டே வரும் நிலையில், மக்கள் ஆகிய நாம் இருக்கும் தண்ணீரை சரியாக பராமரிக்காமல் சற்று அலட்சியமாக […]
மது ஒழிப்புக்கு எதிராக தனி ஒருவராய் தொடர்ந்து குரல் எழுப்பி வந்த போராளி நந்தினி அவர்களது திருமணம் இன்று எளிமையாய் நடந்து முடிந்தது. நந்தினி – குணா ஜோதிபாசு இவர்களது திருமணம் மதுரை அருகே தென்னமல்லூரில் உள்ள கோவிலில் வைத்து இன்று நடந்தது. 2014 ஆண்டு முதல் தொடர்ந்து மதுவுக்கு எதிராக போராடி வருபவர் நந்தினி. இதுவரையில் பல போராட்டங்களை தனி ஒருவராய் நடத்தி வந்த இவர் மீது காவல் துறை பல வழக்குகளை பதிவு செய்துள்ளது. […]