Tag: snowfall

இமாச்சல பிரதேசத்தில் பனி மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.!

வடமாநிலங்களில் தற்போது குளிர்காலம் நடைபெற்று வருகிறது. இயல்பை விட மிக அதிகமாக இமாச்சலப் பிரதேசம் குலு , சிம்லா உள்ளிட்ட பகுதிகளில் புதிய பனிப்பொழிவு பனிமழை காரணமாக கடும் குளிர். இமாச்சலப் பிரதேசம் குலு , சிம்லா உள்ளிட்ட பகுதிகளில் புதிய பனிப்பொழிவு , பனிமழை காரணமாக கடும் குளிர் காணப்பட்டது. இதனால் இமயமலைப் பிரதேசத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் வேலைக்கு போகாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில் வேளைக்கு பணியாட்கள் கிடைக்காமல் பல […]

himachal pradesh 3 Min Read
Default Image

பனிப்பொழிவால் பாதித்த போக்குவரத்து – திணறும் திம்பம்

திண்டுக்கல் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இம்மலைப்பாதை வழியாக தமிழகம் – கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கிடையே பேருந்து மற்றும் சரக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலையில் திம்பம் மலைப் பாதையில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால் இப்பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

snowfall 2 Min Read
Default Image

கடும் பனிப்பொழிவால் கொய்யாப்பழத்தில் ஆணிக்காய் பாதிப்பு…!!

கடும் பனிப்பொழிவால் திண்டுக்கல்லில் கொய்யாப்பழத்தில்  ஆணிக்காய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டாரப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் கொய்யா சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக நிலவிவரும் கடும் பனிப்பொழிவு காரணமாக கொய்யாப்பழத்தில்  ஆணிக்காய் பாதித்துள்ளது. பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் அடங்கிய  கொய்யாப்பழத்தில் பாதுகாக்க எவ்வளவு மருந்து அடித்தாலும் பலன் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும், இதனால், பல லட்சம் ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற […]

damaged 2 Min Read
Default Image

உறைபனியால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது …!!

நீலகிரியில் அக்டோபர் மாதம் தொடங்க வேண்டிய குளிர் காலம், நவம்பர் மாதமே தொடங்கியுள்ளது. அங்கே உள்ள  பகுதிகளில் உறை பனி பொழிவு காரணமாக புல்வெளிகள் வெண் கம்பளம் போர்த்தியது போல் காட்சியளிக்கின்றது. சாலையில் செல்லும் வாகனங்களின் மேல் பனி பொழிந்துள்ளதால் அவை ஐஸ் கட்டிகளாக தெரிகின்றன. இந்த உறைபனி இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தினமும் காலை 11 மணி வரை பனிப்பொழிவு நீடிப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

nature 2 Min Read
Default Image

கடும் பனிப்பொழிவால் ரயில் சேவைகள் ரத்து…!!

டெல்லியில் கடுமையான பனிப்பொழிவால், விமான ,  ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.கடந்த ஆண்டுகளை காட்டிலும்  இந்த ஆண்டு பனிப்பொழிவு அதிகம் என்றே சொல்ல படுகின்றது.அதிகாலை வேளைகளில் பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் நடைபயணம் செல்பவர்கள் அதிகமான பாதிக்கப்படுகின்றனர். அதிக பனிபொழிவால் பாதிக்கப்பட்டுருக்கு தேவையான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது.இந்நிலையில் கடுமையான பனிமூட்டத்தால் ரயில்கள் மற்றும் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

#Delhi 2 Min Read
Default Image

காஷ்மீரில் பனிப்பொழிவு அதிகரிப்பால் பொதுமக்கள் பாதிப்பு…!!

காஷ்மீரில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மொகுல் சாலை காஷ்மீரில் உள்ள பூஞ்ச், ரஜோரி மற்றும் சோபியான் ஆகிய மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலையாகும். ஆனால் பெய்து வரும் தொடர் பனிப்பொழிவால் சாலை மூடப்பட்டுள்ளது. காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகர், குல்மார்க் மற்றும் பாகல்கம் ஆகிய இடங்களில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. பல இடங்களில் சாலைகளில் கொட்டியுள்ள பனியை அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஸ்ரீநகரில் மைனஸ் 4.2 டிகிரி செல்சியஸில் குளிர் […]

#Delhi 2 Min Read
Default Image