ஜப்பானில் ஏற்பட்ட பனிப்புயலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவு மற்றும் போர்வைகள் வழங்கி நெடுஞ்சாலை துறை சரி செய்து வைத்துள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு பிரச்சினைகளால் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து தான் வருகின்றனர். அண்மையில் கூட தமிழகத்தில் புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் பலர் உயிரிழந்தனர். பலர் தங்களது வீடு வாசல்களை இழந்தனர். தற்பொழுதும் ஜப்பானில் பனி பொலிவு அதிக அளவில் […]
அமெரிக்காவில் ஆண்டுதோறும், பனிப்புயல் வீசுவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், இந்த ஆண்டு பனிப் புயலின் தாக்கம் பலமடங்காக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த இரு நாட்களாக வட கிழக்கு மாகாணங்களான கனெக்டிகட், டெலவர், மய்ன், மேரிலேண்ட், நியூ ஜெர்சி, நியூயார்க் மற்றும் பல மாகாணங்களில் கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. அமெரிக்காவில் ஆண்டுதோறும், பனிப்புயல் வீசுவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், இந்த ஆண்டு பனிப் புயலின் தாக்கம் பலமடங்காக அதிகரித்துள்ளது. பனிப்புயல் காரணமாக பெரும்பாலான அமெரிக்க மக்கள் வீடுகளிலேயே […]
சென்னையிலும் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. மஸ்கட், ஆஸ்திரேலியா, டெல்லியில் இருந்து சென்னை வந்த 5 விமானங்கள் ஐதராபாத் , திருவனந்தபுர விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன. தற்போது வட மாநிலங்களான டெல்லி , உத்தரபிரதேசம்,ராஜஸ்தான் போன்ற மாநிங்களில் கடும் பனி நிலவி வருகிறது.இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.மேலும் விமான, சாலை மற்றும் ரயில்வே போக்குவரத்து பாதிக்கப்பட்டது உள்ளது. இந்நிலையில் சென்னையிலும் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் […]
தற்போது உத்தரபிரதேசம்,ராஜஸ்தான் ,டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பனிமூட்டம் மிகவும் கடுமையாக காணப்படுகிறது. பனிமூட்டம் காரணமாக 19 ரெயில்கள் தாமதமாக வருவதாக வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. தற்போது வடமாநிலங்களான உத்தரபிரதேசம்,ராஜஸ்தான் ,டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பனிமூட்டம் மிகவும் கடுமையாக காணப்படுகிறது. பனி மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். சில மீட்டர் தொலைவு தூரம் மட்டுமே மற்ற வாகனங்கள் கண்ணுக்கு தெரிவதால் பயத்தில் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் ஒட்டி செல்கின்றனர். இந்நிலையில் […]
பனிமூட்டம் காரணமாக 500 விமானங்கள் தாமதமாகியுள்ளன. மேலும் 21 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டெல்லிக்கு 30 ரெயில்கள் தாமதமாக வருகின்றனர்.டெல்லியில் இன்று காலை 2.6 டிகிரி செல்சியசாக வெப்ப நிலை பதிவானது. தற்போது டெல்லியில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான குளிர் நிலவி வருகிறது. பனிமூட்டம் காரணமாக போக்குவரத்தும் டெல்லியில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சாலைகளில் சில மீட்டர் தூரமே வாகனங்கள் கண்ணு தெரிவதால் […]
ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம் ஆகிய பல பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வாகனங்கள் அனைத்தும் சாலைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றன. பாம்பன் பாலம் மற்றும் கடல் பகுதியில் அதிக அளவு பனிமூட்டம் காணப்பட்டதால் பாம்பன் பாலத்தில் செல்லக்கூடிய ரயில்கள் மற்றும் தீவுகளை சுற்றுலா பயணிகள் பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
சென்னை முழுவதும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் செல்கின்றனர். மேலும் இந்த கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிப்பு அடைந்துள்ளது.மொரீசியஸ், கோலாலம்பூர், கொச்சி விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.