Live: களைகட்டும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முதல்… இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் வரை.!
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் இருந்து சிறந்த ஜல்லிக்கட்டுக் காளைகள் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளன. 1,000 காளைகளும், 750 மாடுபிடி வீரர்களும் களம் காண்கின்றனர். வெற்றி பெறும் மாடுபிடி வீரர், காளைக்கு கார், டிராக்டர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளன. மேலும், இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடந்த போர் முடிவுக்கு வந்த நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. […]