சென்னையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தை செயல்படுத்த அமைக்கப்பட்ட ஆலோசனை குழு மறுசீரமைப்பு. சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான ஆலோசனை குழுவை மறுசீரமைப்பு செய்து, அதற்கான உறுப்பினர்களை நியமனம் செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான வழிகாட்டுதல் குழு தலைவராக மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வழிகாட்டு குழுவின் துணை தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சென்னை மேயர் பிரியா ராஜன், எம்எல்ஏ எழிலன், மாநகராட்சி […]
தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.39.86 கோடி மதிப்பிலான நடைபாதை வளாகம், சாலை திறக்கப்பட்டது இதனை கோயில் மணியை அடித்து திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி . இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் கூறுகையில்,தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஸ்மார்ட் சிட்டி பணிகளில் தமிழகம் 8வது இடத்தில் உள்ளது .உலகத்தரம் வாய்ந்த […]
மதுரை: மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை நகரில் ஆயிரம் கோடி ரூபாயில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் விரைவில் துவங்கவுள்ளன.இத்திட்டத்தில் பெரியார் பஸ் ஸ்டாண்ட் மேம்பாடு, பழைய சென்ட்ரல் மார்க்கெட்டில் அடுக்குமாடி பார்க்கிங், சுற்றுலா, வைகை மேம்பாடு பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பெரியார் பஸ் ஸ்டாண்ட்டை மேம்படுத்த 131 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட்கள் இணைக்கப்பட்டு நவீனப்படுத்தப்படும். தற்போதைய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் […]