பீகார் இளைஞர்கள் இடம்பெயரக் கூடாது! பேரணியில் ராகுல் காந்தி அட்வைஸ்!
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் “பலாயன் ரோகோ, நவுக்ரி தோ” (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு) என்ற பெயரில் நடைபெற்ற பேரணியில், கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார். பேரணியில் கலந்துகொண்டு அவர் பேசுகையில் ” பிஹார் இளைஞர்கள் வேலை தேடி மற்ற மாநிலங்களுக்கு இடம்பெயர வேண்டிய நிலையை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இளைஞர்கள் தங்கள் திறமையாலும் உழைப்பாலும் எதையும் சாதிக்கக் கூடியவர்கள். […]