விண்ணில் செலுத்தப்பட்ட இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவான வீடியோ வெளியாகியுள்ளது. ஐதரபாத்தைச் சேர்ந்த “ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்” என்ற தனியார் நிறுவனம், ‘விக்ரம் – எஸ்’ என்ற பெயரில் ராக்கெட் தயாரித்து நேற்று (நவம்பர் 18) இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ‘விக்ரம் – எஸ்’ ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் இந்த ராக்கெட்டுடன் கேமரா பொறுத்தியுள்ளது, அந்த கேமராவில் பதிவான வீடியோவை வெளியிட்டுள்ளது. ராக்கெட்டில் பொருத்தப்பட்ட கேமராவால் எடுக்கப்பட்ட வீடியோ, […]