Suryakumar Yadav : டெல்லி அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டி 20 கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடரில் விளையாடிய போது அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் லண்டனில் ஹெர்னியாவில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வெடுத்தார். பிறகு காயம் குணமடைந்த நிலையில் , பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) கிரிக்கெட் […]
IPL 2024 : இந்த ஆண்டில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாட போகும் முதல் 2 போய்க்கிளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சூர்யா குமார் யாதவ் விளையாட மாட்டார் என பிசிசிஐ சுற்று வட்டாரங்களின் மூலம் தகவல் வெளிவந்துள்ளது. கொல்கத்தா மற்றும் மும்பை அணிக்காக விளையாடிய நட்சத்திர வீரரான சூர்யா நன்றாக ஐபிஎல்லில் விளையாடியும் பல ஆண்டுகள் இந்திய அணியில் இடம்பெறாமலே இருந்தார். Read More – IPL 2024 […]
இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் தற்போது வயிற்றுப்பகுதியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பிரச்சனை காரணமாக சூர்யகுமார் யாதவுக்கு குடலிறக்கத்துக்கான அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் வரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகம் தான் எனவும் புதிய தகவல்கள் பரவி வருகிறது. கடைசியாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் இறுதிப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் பீல்டிங் செய்துகொண்டிருந்த போது அவருக்கு காயம் ஏற்பட்டது. கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக […]
சூர்யகுமார் யாதவ் ரன்கள் அடிக்க தவறினால் இந்தியா 140-150 ரன்கள் அடிப்பது கஷ்டம் தான் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். டி-20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிகள் நாளை தொடங்குகிறது. முதல் அரையிறுதியில் பாக். அணி நியூசிலாந்தை எதிர்த்து விளையாடுகிறது. இரண்டாவது அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இங்கிலாந்திற்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் ரன்கள் அடிக்க வில்லையெனில் இந்தியா, நிச்சயம் 140 – 150 ரன்கள் அடிக்க திணறும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். ஜிம்பாப்வேவிற்கு எதிரான போட்டியில் […]
உங்களிடம் 6 சூர்யகுமார் யாதவ் இருந்தால் அவர்கள் அனைவரையும் எனது அணிக்கு வைத்துக்கொள்வேன் என்று டாம் மூடி கூறியுள்ளார். தற்போது சூப்பர் ஃபார்மில் விளையாடிக்கொண்டிருக்கும் சூர்யகுமார் யாதவ், தனது அற்புதமான 360 ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்து வருகிறார். முன்னாள் இந்நாள் கிரிக்கெட்டர்கள் பலரும் அவரது சிறப்பான ஆட்டத்தை புகழ்ந்து வருகின்றனர். இதேபோல் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர் டாம் மூடி, புகழ்ந்து பேசியுயள்ளார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் உலகின் நம்பர் 1 […]
சூர்யகுமாரின் வீக்னஸ் என்னவென்று கண்டுபிடிப்பது ரொம்பவே கடினம் என்று ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார். டி-20 உலகக்கோப்பை போட்டியின் சூப்பர்-12 போட்டியில் நேற்று நடைபெற்ற இந்தியா-தென் ஆப்பிரிக்கா ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் மட்டும் நிலைத்து நின்று விளையாடி 68 ரன்கள் குவித்திருந்தார். இந்த நிலையில் நேற்றைய போட்டிக்கு பிறகு முன்னாள் நியூசிலாந்து கேப்டன் ஸ்டீபன் பிளெமிங், இந்திய வீரர் சூரியகுமார் பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார். வேகம் மற்றும் […]
ஆஸ்திரேலியாவில் உள்ள வீடுகள்,விவசாய நிலங்கள் போன்ற அனைத்தும் லட்சக்கணக்கான எலிகளின் படையெடுப்பால் பாதிக்கப்பட்டுள்ளன.மேலும்,எலிகளினால் அங்குள்ள மக்களுக்கு பிளேக் நோயும் பரவி வருகிறது. ஆஸ்திரேலியவில்,மில்லியன் கணக்கான எலிகள்,வீடுகள் மற்றும் விவசாயப் பண்ணைகளை நோக்கி படையெடுத்து வருகின்றன. இதனால்,அங்குள்ள விவசாயிகளும்,மக்களும் எலிகளின் கடுமையான தாக்குதலை எதிர்கொள்கின்றனர். மேலும்,கடந்த சில வாரங்களாக ஆஸ்திரேலியாவில் லட்சக்கணக்கான எலிகள் பயிர்களுக்கு பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளன. அதனால், அறுவடை பயிர்களை விற்க முடியாமல் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.அது மட்டுமல்லாமல்,சிலர் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு கிராமப்புற மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக […]
வியாழன் மற்றும் சனி கோள்கள் 397 ஆண்டுகளுக்கு பிறகு வருகின்ற 21-ஆம் தேதி ஒரே கோளாக காட்சியளிக்க இருக்கிறது. இதனை வெறும் கண்களால் அனைவரும் பார்க்கலாம். வானில் அபூர்வ நிகழ்வாக வியாழன் மற்றும் சனி கோள்கள் 397 ஆண்டுகளுக்கு பிறகு வருகின்ற 21-ஆம் தேதி ஒரே கோளாக காட்சியளிக்க இருக்கிறது. இந்த இரு கோள்களும் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக வானில் மேற்கு திசையில் காட்சி வருகின்றனர். தற்போது இந்த 2 கோள்களும் நாளுக்கு நாள் நெருங்கி […]
76 ஆண்டுகளுக்கு பிறகு நாளை இரவு வானில் ப்ளூ மூன் தோன்ற உள்ளது. சாதாரணமாகவே மனிதர்களாகப் பிறந்த நம் ஒவ்வொருவருக்கும் இயற்கை என்பது அதிசயம் தான். அதுவும் வானத்தில் தோன்றக் கூடிய நட்சத்திரங்களை கூட சில நேரம் பார்த்து ரசிக்க கூடியவர்கள் பலர் இருக்கிறார்கள். இந்நிலையில் சந்திரன் அல்லது சூரியன் சிலசமயங்களில் தங்களது தகவமைப்புகள் மாற்றிக் கொள்ளும் பொழுது ஏற்படக் கூடிய அதிசய நிகழ்வு பல வருடங்களுக்கு ஒரு முறையோ, வருடங்களுக்கு ஒரு முறையோ ஏற்படும். அவ்வாறு […]
பூமியில் இருந்து 18 அடி உயரத்தில் பிறந்த குழந்தை. அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தின், கிளனல்லன் என்ற பகுதியில், ஒரு சமூகத்தினர் முகாம் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பகுதியில் வசித்து வரு ஒரு பெண்ணுக்கு விமானத்திலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. கிளனல்லன் பகுதியில் இருந்து புறப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே, கிரைஸ்டல் ஹிக்ஸ் என்ற அந்த பெண்மணிக்கு, விமானத்திலேயே ஆன் குழந்தை பிறந்துள்ளது.தாயும், சேயும் நலமாக உள்ள நிலையில், குழந்தை குறை மாதத்தில் பிறந்ததால், குழந்தைக்கு […]
நடுவானில் எஞ்சின் செயலிழந்தாலும் விமானம் பறக்கும்: எப்படி தெரியுமா?? விமானத்தின் எஞ்சின்கள் அளிக்கும் த்ரஸ்ட் விசையின் மூலமாக முன்னோக்கி பறக்கின்றன. ஆனால், எஞ்சின்கள் செயலிழக்கும்போது இந்த த்ரஸ்ட் விசை கிடைக்காததால், விமானம் முன்னோக்கி செல்லும் திறனை இழக்கும். ஆனால், பறக்கும் திறனை இழக்காமல் பறந்துகொண்டே இருக்கும். விமானத்தின் அனைத்து எஞ்சின்களுமே செயலிழந்தால் கூட விமானம் குறிப்பிட்ட தூரம் பறக்கும் திறனை பெற்றிருக்கின்றன. அதேநேரத்தில், அருகில்உள்ள விமானதளத்தில் படிப்படியாக கீழே இறங்க துவங்கும். ஓடுபாதை மிக அருகில் இருந்தால் விமானத்தை […]