காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முழு நேர தலைவராக எஸ்.கே.ஹல்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் காவிரி மேலாண்மை ஆணைய இடைக்கால தலைவராக எஸ்.கே.ஹல்தர் நியமனம் செய்யப்பட்ட நிலையில், அவரின் பதவி காலம் வருகின்ற 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய இடைக்கால தலைவராக இருந்த எஸ்.கே.ஹல்தர் நிரந்தர தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக சௌமித்ரா குமார் ஹல்தர் 5 ஆண்டுகள் பதவி வகிப்பார் என்று மத்திய அரசு […]