நடிகர் சியான் விக்ரம் தொடர்ந்து புதிய, புதிய முயற்சிகளை எடுத்து வரும் நடிகர். இவர் படம் என்றாலே ஏதாவது வித்தியாசமான முயற்சி இருக்கும் என நம்பி போகலாம். இந்த நிலையில் நடிகர் விக்ரம் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தன் திரைப்பயணம் குறித்து மனம் திறந்தார். அப்போது நீங்கள் நடித்ததில் உங்களுக்கு பிடிக்காத படம் எது? என்று தொகுப்பாளர் கேட்டார். அதற்கு அவர் நீண்ட நேரம் யோசித்து ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’ என்ற படம் தான் பிடிக்காது என்று கூறினார்.