சென்னை: தமிழகத்தில் பண்டிகை காலங்களிலும் வார இறுதி நாள் விடுமுறைகளை முன்னிட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். வரும் 14ம் தேதி பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக பொதுமக்கள் பலர் தங்களது சொந்த ஊருக்கு செல்வார்கள். இந்த நிலையில், அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர, ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். அதன்படி, பொங்கல் பண்டிகையையொட்டி 10, 11, 12, 13 ஆகிய நாட்களில் 14,104 […]