சிவசேனா கட்சியின் மிரட்டலையும் தாண்டி மத்திய அரசின் ஒய் பிளஸ் பாதுகாப்புடன் மும்பைக்கு வந்தடைந்தார், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீராக உணருவதாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் , கங்கனாவின் இந்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் பயமாக இருந்தால் மும்பை மாநகரத்துக்கு வர வேண்டாம் என்றும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து […]
மஹாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இந்த தேர்தலை ஒட்டி நாசிக் பகுதியில் பாஜக சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது, ‘ ஜம்மு காஷ்மீரில் 370 சிறப்பு சட்டத்தை நீக்கியது பாஜகவின் குறிக்கோள் அல்ல. அது மக்களின் விருப்பம். அங்குள்ள மக்களும் மற்ற பகுதிகளில் இருக்கும் மக்கள் போல இருக்க வேண்டும் என குறிப்பிட்டார். மேலும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது பற்றி சிலர் அதிகப்ரசங்கி தனமாக […]
பிரியங்காவின் அரசியல் வருகை காங்கிரசுக்கு நல்ல பலனை தருகின்றது என்று சிவசேனா தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னெடுக்கும் பணியில் அனைத்து கட்சிகளும் இறங்கியுள்ள. குறிப்பாக மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கெதிராக வலுவான கூட்டணி அமைக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி பொது செயலாளராக அறிவிக்கப்பட்டார் . இதையடுத்து பிரியங்கா காந்தியின் அரசியல் வருகை காங்கிரஸ் கட்சிக்கு […]
31ம் தேதிக்குள் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்குமாறு, சிவசேனாவிற்கு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா கெடு விதித்துள்ளார். மகாராஷ்டிர மாநில பாஜக தலைமையிலான அரசில் சிவசேனா அங்கம் வகிக்கிறது. சமீப காலங்களில் பாஜகவின் பல்வேறு செயல்பாடுகளை விமர்சித்து வந்த சிவசேனா ஊழல் புகார்களில் சிக்கியுள்ள பாஜகவுடன் ஏன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பினார். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் இந்தக் கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்தன் வாயிலாக வருகின்ற 31ம் […]
மும்பை; பிரதமர் மோடியை மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிட்டு உத்தரப்பிரதேச ‘சாமியார்’ முதல்வர் ஆதித்யநாத் பேசியது தொடர்ந்து கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது.குறிப்பாக, அவரது பேச்சை சிவசேனா கடுமையாக கண்டித்துள்ளது. மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது, மோடியை சிவாஜியுடன் ஒப்பிட்டதைக் குறிப்பிட்டுள்ள அவர், “17-ஆவது நூற்றாண்டைச் சேர்ந்த சிவாஜி மகாராஜா எந்த அரசியல் கலவரங்களிலும் ஈடுபட்டதில்லை” என்று கூறி மோடியையும், ஆதித்யநாத்தை சாடியுள்ளார். மேலும், ரபேல் […]
விஜய் மல்லையா அருண் ஜேட்லியை சந்தித்ததாகக் கூறியதை பெரிது படுத்தும் காங்கிரஸின் குற்றச்சாட்டு முட்டாள்தனமானது என்று சிவசேனா கடுமையாகத் தாக்கியுள்ளது. இது குறித்து அதன் கட்சிப்பத்திரிகையான சாம்னாவில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தச் சர்ச்சைகளே 2019 லோக்சபா தேர்தலுக்குத் தயார்படுத்திக் கொள்வதற்கான ஒரு பகுதியே. மல்லையா ஒரு பொய்யர், அவர் கூறிய ஒரு வார்த்தை அருண் ஜேட்லியை பிரச்சினைக்குள்ளாக்கியது. லண்டன் செல்லும் முன் அருண் ஜேட்லியைச் சந்தித்து செட்டில் செய்வதாகக் கூறியதாகத் தெரிவித்தார். மல்லையா போன்ற ஒரு பொய்யரின் கூற்றை […]
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜனதா-சிவசேனா இடையே சமீப காலங்களாக கருத்து மோதல்கள் ஏற்பட்டது. மத்திய பா.ஜனதா அரசின் கொள்கைகளையும், பிரதமர் மோடியையும் சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்தது. இதனால் இரு கட்சிகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர மாட்டோம் என்று கூறி சிவசேனா கட்சி உள்ளாட்சி தேர்தலிலும், இடைத்தேர்தல்களிலும் தனித்து போட்டியிட்டது. மேலும் வருகிற 2019 பாராளுமன்ற தேர்தலிலும் சிவசேனா தனித்து போட்டியிடும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. […]
பா.ஜ.க தலைவர் அமித் ஷா, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்த நிலையில், அந்த கட்சியுடன் கூட்டணி இல்லை என சிவசேனா கூறியுள்ளது. கூட்டணி தலைவர்களை சந்திக்கும் பயணத்தில் மும்பைக்கு வந்த அமித் ஷா, அங்குள்ள உத்தவ் தாக்கரேவின் வீடான மாதோஸ்ரீக்கு சென்றார். அவருக்கு பூச்செண்டு கொடுத்த வரவேற்ற தாக்கரே, வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். இருவரும் நடத்திய பேச்சுவார்த்தை பின்னர் அமித் ஷா விடை பெற்று சென்றார். இதனிடையே சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், தேர்தலை தனித்து […]
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை, அவரது காலணியாலேயே அடிக்க வேண்டும் என்று தோன்றியதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பல்ஃகார் சென்றிருந்த யோகி ஆதித்யநாத், சத்ரபதி சிவாஜி புகைப்படத்துக்கு மாலை அணிவித்தார். அப்போது காலில் அணிந்திருந்த காலணிகளை அவர் கழற்றவில்லை. இதுகுறித்து சிவசேனா பத்திரிக்கையான சாமனாவில் எழுதியுள்ள உத்தவ் தாக்கரே, யோகி ஆதித்யநாத் யோகி அல்ல போகி என்று கூறியுள்ளார். சிவாஜி சிலைக்கு காலணியுடன் மாலை அணிவித்த போது, அவரது […]