90களில் தமிழில் புகழ்பெற்று விளங்கிய நடிகை சிவரஞ்சனி. இவர் தெலுங்கில் ஊஹா என்ற பெயரில் திரைப்படங்களில் நடித்தார். நடிகை சிவரஞ்சனியின் வாரிசுகள் சினிமாவில் குதித்துள்ளனர். பின்னர் ஐதராபாத்தில் குடியேறிய நடிகை சிவரஞ்சனி, ஹீரோ ஸ்ரீகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ரோஷன், ரோஹன் ஆகிய மகன்களும், மேதா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் ரோஷன் லாஸ் ஏஞ்சல்ஸில் சினிமா சம்மந்தமாகப் படித்து வருகிறார். இதற்கிடையில் ’நிர்மலா கான்வெண்ட்’ என்ற தெலுங்கு படத்தில் ரோஷன் கதாநாயகனாக அறிமுகமானார்.