ஓ பன்னீர்செல்வம் ராஜினாமா செய்திருக்காவிட்டால் அவரை தான் முதல்வராக தொடர்ந்து அமர வைத்து இருப்பேன் என சசிகலா அதிமுக நிர்வாகி சிவனேசனிடம் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று திரும்பியுள்ள சசிகலா பெங்களூருவில் சென்னை திரும்பியதும், அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அரசிலிருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். இதனையடுத்து கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் சசிகலா தனது ஆதரவாளர்களுடன் பேசக்கூடிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.தற்போதும் தேனி மாவட்டத்தை […]