கேரளா மாநிலத்தில் திருக்குறள் மற்றும் திருவள்ளுவரை பரப்பிய சிவானந்தர் காலமானார். கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்துக்கு உட்பட்ட பிரவம் எனும் ஊரில் 1946 ஆம் ஆண்டு கொச்சன் – பொலியாள் தம்பதிக்கு 12-வது மகனாக பிறந்தவர் தான் சிவானந்தர். இவர் தனது சிறு வயதில் இருந்தே திருக்குறள் மீது அதிக ஈடுபாடு கொண்டவராக இருந்துள்ளார். இதனையடுத்து மக்களிடம் திருக்குறளின் வாழ்வியல் நெறிகளை எடுத்துக் கூறுவதை தனது முழுநேரப் பணியாக செய்து வந்துள்ளார். இவரது துணைவியார் சரஸ்வதி அம்மையாரும் […]