ஒரு சில கிராமங்களில், நேர்த்திக்கடனுக்காக பூஜை செய்யும் சாமியாடிகள் ஒன்றிரண்டு பேர் காது வளர்ப்பார்கள். ஆனால், தாங்கள் வணங்கும் தெய்வத்திற்காக, ஒரு கிராமமே காது வளர்க்கும் வினோதத்தினை எஸ்.கோவில்பட்டியில் காணலாம். சிவகங்கை மாவட்டத்தின் கடைக்கோடியில் அமைந்துள்ள எஸ்.கோவில்பட்டி, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியை சேர்ந்த குக்கிராமம்.சுமார் 650 குடும்பங்களை க் கொண்ட இந்த எஸ்.கோவில்பட்டி கிராமத்திற்குள் நுழைந்தால், எதிர்படும் அத்தனை ஆண்களும் வயது வித்தியாசமின்றி “செகுட்டு ஐயனாருக்காக” (செவிட்டு ஐயனார்) காதுகளை வளர்த்திருந்தனர். அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்திருக்கிறது செகுட்டு […]