நடிகை தமன்னா தமிழ் சினிமாவில், பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர். இவர் தமிழில் மட்டுமல்லாது, மற்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது, ‘சீட்டிமார்’ என்ற தெலுங்கு படத்தில் கபடி அணி பயிற்சியாளராக நடித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த படத்தில், கபடி அணி பயிற்சியாளராக நடித்து வருகிறேன். இது சவாலான வேடமாக இருக்கிறது. இந்த கதாபாத்திரத்துக்காக கடுமையாக உழைக்கிறேன். நான் நடிக்கும் முதல் விளையாட்டு சம்பந்தமான கதையம்சம் உள்ள படம் இதுவாகும். […]