சிட்ரங் புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை வங்க தேசத்தில் 35 பேராக அதிகரித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறியது, சிட்ரங் என பெயர் வைக்கப்பட்ட அந்த புயல் வங்கதேசத்தில் கோர தாண்டவம் ஆடிவிட்டு சென்றது. நேற்று முன்தினம் வங்கதேசத்தின் பாரிசால் பகுதியில் கரையைக்கடந்த இந்த சிட்ரங் புயல் வங்கதேசத்தின் போலா மாவட்டத்தில் பெறும் சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றது. அந்த பகுதியில் பெரும்பாலான மரங்கள் சாலைகளில் முறிந்து விழுந்துள்ளன, மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதத்தில் இடிந்துள்ளன. இரண்டாவது […]
சிட்ரங் புயல் வங்கதேசத்தின் கடற்கரையை ஒட்டியுள்ள பரிசால் பகுதியில் நேற்றிரவு(திங்கள் கிழமை) கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்த போது மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் பலத்த மழை நீடித்தது. மேலும் வங்கதேசத்தின் பர்குனா, நரைல், சிராஜ்கஞ்ச் மற்றும் போல் தீவு ஆகிய மாவட்டங்களைச்சேர்ந்த 9 பேர் இந்த புயலின் கோரதாண்டவத்துக்கு பலியாகியுள்ளனர். புயல் கரையைக் கடந்து வலுவிழந்தாலும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு இந்திய வானிலை […]