தமிழ் சினிமாவின் பிரபலமான நகைசுவை நடிகர் வடிவேலு. இவர் ப்ரெண்ட்ஸ் படத்தில் நடித்த நேசமணி கேரக்டர் இன்று உலகம் முழுவதும் ட்ரெண்டாகி வருகிறது. இதனையடுத்து, நடிகர் வடிவேலு இதுகுறித்து பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ‘எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொல்லுவார்கள். இந்த நேசமணிக்கு கிடைத்த புகழ் எல்லாமே, பிரண்ட்ஸ் பட டைரக்டர் சித்திக்கையே சேரும். நேசமணி என்று ஒரு கேரக்டரை உருவாக்கியதே அவர் தான்.’ என்று கூறியுள்ளார்.