மார்ச் 13, 1781 – வரலாற்றில் இன்று இங்கிலாந்தை சேர்ந்த சர் வில்லியம் செர்சல் என்ற வானியலாளரால் யுரேனஸ் கொள் கண்டறியப்பட்டது. யுரேனஸ் சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து ஏழாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். விட்டத்தின் அடிப்படையில் இது மூன்றாவது பெரிய கோளாகும். இக்கோள் கிரேக்கக் கடவுள் யுரேனசின் நினைவாக பெயரிடப்பட்டது. கண்ணுக்குப் புலப்படும் கோளாயினும், அதன் மிகுந்த மெதுவான கோளப்பாதையாலும் மங்கலான தோற்றத்தாலும் பண்டைய கால மக்கள் அதனை ஒரு கோளாக கருதவில்லை.