சார் டீசர் : நடிகர் விமல் கடைசியாக துடிக்கும் கரங்கள் படத்தில் நடித்து இருந்த நிலையில், படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை என்றே கூறலாம். இந்த படத்தினை தொடர்ந்து அடுத்ததாக விமல் இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சார் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் விமலுடன் சாயாதேவி கண்ணன், சிராஜ் எஸ், சரவணன், ரமா, ஜெயபாலன் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்தினை இயக்குனர் வெற்றிமாறன் வழங்குகிறார். படத்திற்கு […]