திருவள்ளூர் : தமிழ்நாடு மாநிலம் திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பெயிண்ட் தொழிற்சாலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர், ஒரு பெண் பலத்த காயமடைந்தார். தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் இணைந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ எறிந்து […]
பெரம்பலூரில் அமையவுள்ள சிப்காட் தொழிற்சாலை துவக்க பணிகளை துவங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருச்சி, பெரம்பலூர் , அரியலூர் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அந்தவகையில், காலையில் திருச்சி, காட்டூர் பகுதியில் ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், 25 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ‘வானவில் மன்றம்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து தற்போது, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை […]
அரசு மற்றும் டான்சிட்கோ புறம்போக்கு நிலங்களை,நில உரிமை மாற்றம் மற்றும் இரயத்துவாரி என மாற்றம் செய்து முடிவெடுக்க அதிகாரமளிக்கப்பட்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத் (டான்சிட்கோ) தொழிற்பேட்டைகளில் உள்ள அரசு புறம்போக்கு என வகைப்பாடு கொண்ட நிலங்களை நில உரிமை மாற்றம் மற்றும் இரயத்துவாரி என வகைபாடு மாற்றம் செய்து முடிவெடுத்திட அதிகாரமளிக்கப்பட்ட குழு (Empowered Committee) அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் புதியதாகா சிபிகாட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளது என நிதியமைச்சர் தெரிவித்தார். தமிழக சட்டபேரைவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இதில் தமிழகத்திற்கான பல்வேறு நலதிட்டங்களும், அதற்கான நிதி ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் புதியதாகா சிபிகாட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாம். அதற்காக தற்போது முதற்கட்டமாக […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிப்காட் வளாகத்தில் தனியார் சரக்குப் பெட்டக முனையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 10 கோடி ருபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானானதாக தகவல்கள் வெளியானது. தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் பகுதியில் உள்ள தனியார் சரக்குப் பெட்டக முனையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் சுமார் 7 தீயணைப்பு வாகனம் ஈடுபட்டு வருகிறது. இந்த தீ […]
தமிழகத்தில் நாளை முதல் சில கட்டுப்பாடுகளுடன் 17 தொழிற்பேட்டைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால், 4ஆம் கட்ட ஊரடங்கை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் நாளை முதல் கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் இயங்க சில கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதில், அனைத்து தொழிற்பேட்டைகளிலும் 25 சதவீத அளவிலான பணியாளர்களை இயங்குமாறும், பணிக்கு வரும் தொழிலார்கள் அனைவரின் உடல்வெப்பநிலையை […]
போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் மீது பொய் வழக்கை பதிவு செய்து கைது செய்யும் தூத்துக்குடி சிப்காட் காவல்துறை ஆய்வாளர் ஹரிஹரன். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.குறிப்பாக கடந்த 13 ஆம் தேதி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்லுரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இப்போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட கல்லுரி மாணவர்கள் பங்கேற்றனர்.இப்போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை படிக்கும் மாணவர்கள் என்று பார்க்காமல் 6-பிரிவுகளில் 16-மாணவர்கள் […]
திருமங்கலம்: விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் செவ்வாயில் தாலுகா அளவில் நடைபெறுகிறது. அதன்படி திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர் முகாமிற்கு மண்டல துணை வட்டாட்சியர் அழகர்சாமி தலைமை வகித்தார். வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள், ‘‘சிப்காட் அமைவதாக கூறிய சிவரக்கோட்டை பகுதியில் அதிகாரிகள் சிலர் இடம் வாங்கியுள்ளனர். இதனால் விவசாயிகள் தொடர்ந்து எதிர்த்து வரும் சிப்காட் திட்டத்தினை கொண்டு வருவார்களோ […]