8 விருதுகள் பெறும் முதல் பாடகர் யேசுதாஸ்க்கு 8வது முறையாக தேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது . தேசிய விருது பற்றி யேசுதாஸ் கூறியதாவது: இன்று (நேற்று) காலையில் நான் வழக்கம்போல எழுந்து பிராக்டீஸ் பண்ணிக்கொண்டிருந்தேன். என் மகன் வந்து என்னை கட்டித் தழுவினான். நான் வழக்கம்போல பாசத்தை பொழிகிறான் என்று தான் நினைத்தேன். அதற்பிறகு சொன்னான். உங்களுக்கு தேசிய விருது அறிவித்திருக்கிறார்கள். இது 8வது விருது என்றும் சொன்னான். என் குருநாதர் சொல்வார் லட்சுமி (பணம்) பின்னாடி போகாதே […]