கோவை : மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை குடமுழுக்கு நடைபெறும் நிலையில் ரூ. 4 இலட்சம் மதிப்பிலான வெள்ளிவேல் திருட்டு என்று சில தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளிவருகின்றன. மேலும், துறவி வேடத்தில் வந்து வெள்ளி வேலை மர்மநபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியானது. தற்போது, மருதமலை கோயிலில் வெள்ளிவேல் திருட்டு நடக்கவில்லை. அடிவாரத்தில் தனியாருக்கு பாத்தியப்பட்ட தியான மண்டபத்தில் திருட்டு நடந்துள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். […]