ட்லாக்ஸ்காலா : இந்த ஆண்டிற்கான, வில்வித்தை உலகக்கோப்பைத் தொடரானது மெக்சிகோவில் உள்ள ட்லாக்ஸ்காலாவில் நடைபெற்று வந்தது. இதில், நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனையான தீபிகா குமாரி வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். முன்னதாக நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார் தீபிகா குமார். இந்த நிலையில், இறுதி போட்டியில் சீனாவின் லி ஜியாமனும் எதிர்த்து விளையாடினார். இதில், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த லி ஜியாமன் 6-0 என்ற […]
உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதல் பதக்கத்திற்கான இந்தியாவின் 19 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நீரஜ் சோப்ரா. ஓரிகானின் யூஜினில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.13 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார், அதை அவர் தனது நான்காவது முயற்சியில் பதிவு செய்தார்.
பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் சொந்த ஊருக்கு வந்த நிலையில் அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. மாரியப்பன் தொடந்து இரண்டாவது முறையாக பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றுள்ளார். தற்போது நடந்து முடிந்த பாராலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதலில் 1.86 மீட்டர் தாண்டி வெள்ளி பதக்கம் வென்றார். தற்போது இவரது சொந்த ஊரான சேலம் அருகே உள்ள பெரிய வடகம்பட்டிக்கு திரும்பியுள்ள […]
தமிழக முதல்வரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி என்று டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் தெரிவித்துள்ளார். டோக்கியோ பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பிறகு சென்னை வந்த மாரியப்பன், அண்ணா அறிவாலயம் சென்று முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. 10 நாட்களுக்கு பிறகு பயிற்சி தொடங்கவுள்ளேன். இந்த முறை பாராலிம்பிக்கில் மழை பெய்ததால் சற்று இடையூறாக இருந்தது. […]
அடுத்த ஒலிம்பிக்கில் கண்டிப்பாக தங்க பதக்கம் வென்று வருவேன் என ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் நம்பிக்கை. டோக்கியோ பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பிறகு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மாரியப்பன், பதக்கம் வென்ற மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த முறை தங்கத்தை எதிர்பார்த்து சென்றேன். ஆனால், மழை பெய்ததால் சற்று இடையூறு ஏற்பட்டது. அதனால், வெள்ளி பதக்கம் வென்றதாக தெரிவித்தார். அடுத்த ஒலிம்பிக்கில் கண்டிப்பாக தங்க பதக்கம் வென்று வருவேன். […]
டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில்,இந்தியாவின் பவினா பென் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இருந்து 54 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அதன்படி,நேற்று முன்தினம் நடைபெற்ற டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில் உலகின் நம்பர் 2 வீராங்கனையான செர்பியாவை சேர்ந்த பெரிக்கை 11-5, 11-6, 11-7 என்ற செட்கணக்கில் வீழ்த்தி, பவினா அரையிறுதிக்கு முன்னேறினார். இதனைத் […]
துபாயில் நடைபெற்று வரும் ஆசிய குத்துச்சண்டை போட்டியின் 51 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டி. இந்தியா வீராங்கனை மேரி கோம்,கஜகஸ்தானின் நசீம் என்பவரிடம் தோல்வியுற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். துபாயில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை தொடரின் மகளிருக்கான 51 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில்,இந்தியாவின் பிரபல வீராங்கனை மேரி கோம்,கஜகஸ்தான் வீராங்கனை நஸிமை இறுதிப் போட்டியில் எதிர்கொண்டார். மூன்றாவது மற்றும் இறுதிச் சுற்றில் மேரி கோம் கடுமையாக முயற்சித்தும் நசீமை அவரால் வீழ்த்த முடியவில்லை. இதனைத் தொடர்ந்து,ஆரம்பம் முதலே கடுமையான […]