தென்னிந்தியா தமிழ் சினிமாவில் 80, 90களில் எத்தனையோ நாயகிகள் கலக்கியிருப்பர். அதில் ரசிகர்களால் இன்னும் மறக்கமுடியாத ஒரு கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா. இவரது பிறந்தநாள் வந்தாலே அவரை பற்றி நினைவுகள் கண்டிப்பாக ரசிகர்களுக்கு வந்துவிடும். அதேபோல் 90களில் எல்லா உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து கலக்கி வந்தவர் நடிகை ரம்பா. இவர்கள் இருவருக்கும் ஒரு சின்ன ஒற்றுமை உள்ளது. அது என்னவென்றால் இருவருக்குமே நிஜ பெயர் விஜயலட்சுமி என்பது தான்.