7 சைமா விருதுகளை சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் பெற்றுள்ளது. சினிமா துறையில் சிறந்து விளங்கும் இயக்குனர்கள், நடிகர், நடிகைகள், இசையமைப்பாளார்கள், துணை கதாபாத்திரங்களில் என அனைவருக்கும் சைமா விருதுகள் வருடம்தோறும் வழங்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த 2020-ஆம் ஆண்டு சிறந்த திரைப்படத்திற்கான விருதை சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படம் பெற்றுள்ளது. இந்த விருது விழா நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. […]