சாந்தனு மற்றும் அதுல்யா ரவியின் முருங்கைக்காய் சிப்ஸ் படத்திலுள்ள ஏதோ சொல்ல என்ற சித் ஸ்ரீராம் பாடியுள்ள பாடல் வெளியாகியுள்ளது. முன்னாள் நடிகரும், இயக்குநருமான பாக்கியராஜ் அவர்களின் மகனான சாந்தனு அவர்களை நாம் பல கதாபாத்திரத்தில் பார்த்திருக்கிறோம். கடைசியாக வானம் கொட்டட்டும் படத்தில் நடித்திருந்தார் தற்போது கூட விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த படத்திற்காக பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் சாந்தனு அடுத்ததாக அதுல்யாவுடன் இணைந்து ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். […]