சேலம் வியாபாரி உயிரிழந்த வழக்கில் கைதான எஸ்.ஐ.பெரியசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கொரோனா தொற்று காரணமாக தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி,மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால்,கொரோனா பரவல் அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் மதுக்கடைகளை திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக,சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் முருகேசன் என்னும் நபர் தருமபுரிக்கு மது வாங்க சென்று விட்டு திரும்பிய போது அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் முருகேசனை மடக்கி லத்தியால் அடித்துள்ளனர். […]