இந்தியாவுக்கு எதிராக பொய்களைப் பரப்பும்,சதி செய்யும் இணையதளம் மற்றும் யூடியூப் சேனல்கள் அனைத்தும் முடக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் எச்சரித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் மற்றும் போலியான செய்திகளை பரப்பியதற்காக 20 யூடியூப் சேனல்கள் மற்றும் இரண்டு இணையதளங்கள் முடக்கப்பட்டதாகவும்,நாட்டிற்கு எதிராக “சதி செய்யும்” நபர்களுக்கு எதிராக அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக,செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: “உளவுத்துறை அமைப்புகளுடன் […]
பிரியங்கா காந்தி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் சீதாபூரில் மொபைல் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா அவர்களின் மகனுடைய கார் மோதியதில் 4 பேர் மற்றும் கலவரத்தில் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர்.இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.இதனால்,விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்திக்க அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டும் வருகிறது. இதனைத் தொடர்ந்து,கடந்த இரு தினங்களுக்கு முன்னர் விவசாயிகளை […]
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்களை அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து மற்ற மற்ற எதற்காகவும் வெளியில் வர அரசு தடை விதித்துள்ளது. அதேபோல மருந்து கடைகள், மளிகை கடைகள், ஹோட்டல்கள் (பார்சல் மட்டும் ), காய்கறி கடைகள், பெட்ரோல் பல்க் ஆகியவை திறக்கமட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மதுபான கடைகளுக்கு திறக்க அனுமதி இல்லை. இந்நிலையில் காரைக்காலில் ஒரு மதுபான கிடங்கில் திருட்டுத்தனமாக மது விற்பனை நடந்துள்ளது. தகவலறிந்த அதிகாரிகள் […]
நிதிப்பற்றாக்குறை காரணமாக நாட்டில் உள்ள 5 முக்கிய வானொலி நிலையங்களை உடனடியாக மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அகமதாபாத், ஐதராபாத், லக்னோ, ஷில்லாங், திருவனந்தபுரம் ஆகிய 5 வானொலி நிலையங்களை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நிதிப்பற்றாக்குறை காரணமாக இந்த வானொலி நிலையங்களை மூடுவதாக அறிவித்துள்ளது. கிராமப்புறங்களுக்கும் செய்திகள் சென்று சேரவேண்டும் என்பதற்காக துவக்கப்பட்ட இந்த வானொலி நிலையங்கள் முடிவுக்கு வரவுள்ளது. மத்திய அரசின் முடிவிற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அமெரிக்காவை முடக்கிய ‘ஷட்டவுனுக்கு’ வந்தது தீர்வு அளிக்கும் விதமாக தற்காலிக நிதியளிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவில் அக்டோபர் முதல் செப்டம்பர் வரை நிதியாண்டாக கணக்கிடப்படுகிறது.அதன்படி 2018-ம் ஆண்டுக்கான நிதியாண்டு கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கியது.அரசு துறைகளுக்கு நிதி ஒதுக்க அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் செலவின மசோதா நிறைவேற்றப்படுகிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடப்பு 2018 நிதியாண்டுக்கான (அக்டோபர் முதல் செப்டம்பர்) பட்ஜெட் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக இதுவரை நிறைவேறவில்லை. அமெரிக்காவில் 7 […]