பிரபல நடிகை என்பது மட்டுமல்ல, மேலும் பல தகுதிகளையும் கொண்டவர் சுருதிஹாசன். பாட்டு, மனோதத்துவம் போன்றவைகளில் தேர்ச்சி பெற்றவர். அமெரிக்க இசைக் கல்லூரியில் சங்கீதம் கற்றுத்தேர்ந்தவர். கமல்ஹாசனின் மூத்தமகள். அழகும், அறிவும் நிறைந்த இவர், தான் கடந்து வந்த பாதையை விளக்குகிறார்! கமல்ஹாசனை நடிகராகவும், அப்பாவாகவும் நான் காண்கிறேன். அவர் வாழ்க்கை என்னில் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கைக்குள் அவர் அத்துமீறி நுழையமாட்டார். அவர் விருப்பத்தை ஒருபோதும் எங்களிடம் திணித்ததில்லை. யாராவது டைரக்டரின் பெயரை குறிப்பிட்டு […]