கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திருமணம் சீரியலில் நடித்திருந்த சித்து – ஷ்ரேயா அஞ்சன் ஜோடி திருமணம் செய்துகொண்டனர். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் எனும் சீரியல் மூலம் பரிட்சயமான ஜோடி தான், சித்து – ஷ்ரேயா அஞ்சன். இவர்கள் நடித்த அந்த திருமணம் சீரியலில் இருவரது கெமிஸ்ட்ரியும் ரசிகர்களால் வெகுவாக கவரப்பட்டது. அப்போதே இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. அதனை இருவரும் உறுதியும் செய்தனர். தற்போது அவர்களது திருமணம் நேற்று கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. அதற்கு […]
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அசுரன். இந்த படம் அனைவரது மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்றது. இப்படம் தற்போது தெலுங்கில் தயாராக உள்ளது. இப்படத்தை தெலுங்கிலும் கலைப்புலி எஸ்.தாணு இன்னொரு தெலுங்கு தயாரிப்பாளருடன் இணைந்து தயாரிக்க உள்ளார். தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். மஞ்சு வாரியார் நடித்த ரோலில் ஸ்ரேயா நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் பற்றிய மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.