நாட்டையே அதிரவைத்துள்ள டெல்லி கொலையில் கைதுசெய்யப்பட்டுள்ள அஃப்தாப் அமின் பூனாவாலா மீதான பொய் கண்டறிதல் சோதனை என்றும் அழைக்கப்படும் பாலிகிராஃப் சோதனையின் மீதமுள்ள இரண்டு அமர்வுகள் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் நடத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன என , PTI செய்தி வெளியிட்டுள்ளது. பூனாவாலா ஏற்கனவே மூன்று அமர்வுகளுக்கு உட்பட்டுள்ளார், கடைசியாக வெள்ளிக்கிழமை சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்றது.அவரது நார்கோ சோதனை டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் என்று ஞாயிற்றுக்கிழமை கிடைக்கப்பெற்ற தகவல்கள் தெரிவித்தன. […]
அஃப்தாப் பூனாவாலா தன்னை வெட்டிக்கொன்று விடுவேன் என மிரட்டியதாக 2020யிலேயே ஷ்ரத்தா வாக்கர் போலீசில் அளித்த புகார் கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன் அஃப்தாப் பூனாவாலா என்பவர் தன்னுடன் லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்த ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணை கொடூரமாக கொலை செய்து, 36 துண்டுகளாக வெட்டி மெஹ்ராலி பகுதியில் உள்ள தனது வீட்டில் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து பிறகு அப்புறப்படுத்தியுள்ளார். கடந்த மே மாதம் […]