கணினி தயாரிப்பு மற்றும் மென்பொருள் தொழில்நுட்பங்களில் பல புதிய கண்டுபிடிப்புகளை படைத்த அமெரிக்காவை சேர்ந்த லாரி டெஸ்லர் உடல்நலக்குறைவால் காலமானார். கணினி அறிவியலில் கட், காப்பி, பேஸ்ட் என்ற செயல்முறையை உருவாக்கிய அமெரிக்க விஞ்ஞானி லாரி டெஸ்லர் உடல்நலக்குறைவு காரணமாக 74வது வயதில் காலமானார். கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர் என்றால், அவரது கண்டுபிடிப்பைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட்போன், டேப்லெட் உள்ளிட்ட சாதனங்களில் (Ctrl+C) மற்றும் (Ctrl+V) ஆகிய ஷார்ட்கட் கீ யை பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது. […]