ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள சௌகாம் பகுதியில் ராணுவம் மற்றும் காவல்துறையின் கூட்டுக் குழுக்கள் நடத்திய என்கவுன்டரில் அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் இந்த என்கவுன்டர் சம்பவம் நடந்தது.
தெற்கு காஷ்மீரில் உள்ள ஷோபியன் மாவட்டத்தின் கனிகம் பகுதியில் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து, தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது, பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதைத்தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தன, இதன் விளைவாக அங்கு மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே தற்போது என்கவுண்டர் நடந்து வருகிறது. இந்த என்கவுண்டரில் இதுவரை அடையாளம் தெரியாத ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார். இருப்பினும், 2 ராணுவ வீரர்களும் காயமடைந்தனர்.
தெற்கு காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் ஒரே இரவில் நடந்த மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். காவல்துறை, ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் ஆகியோர் ஷோபியன் மாவட்டத்தின் சுகன் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை ஒரு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது, பயங்கரவாதிகளுக்கு சரணடைய வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனாலும், அவர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால், ராணுவம் தரப்பிலும் பதிலுக்கு பதிலடி கொடுத்தது என்று ஒரு காவல் துறை அதிகாரி […]